Connect with us

“ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில்தான் கடந்த வாரம் நான் இருந்தேன்! இந்தியா திரும்பிய Jr NTR பகிர்ந்த விஷயம்!”

Cinema News

“ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில்தான் கடந்த வாரம் நான் இருந்தேன்! இந்தியா திரும்பிய Jr NTR பகிர்ந்த விஷயம்!”

ஜப்பானில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பிரபல நடிகர் தனது குடும்பத்துடன் ஜப்பானில் தான் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு?என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் நேற்று திடீரென அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பதும் இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ’RRR’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை நடித்த ஜூனியர் NTR தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்ட ஜப்பான் சென்று இருந்தார். இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடும்பத்துடன் அங்கே இருந்த ஜூனியர் NTR தற்போது ஹைதராபாத் திரும்பி உள்ளார்.

இதனை அடுத்து சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஜப்பானிலிருந்து இன்றுதான் வீடு திரும்பினேன், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் நான் என் குடும்பத்தோடு அங்கே தான் இருந்தேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். ஜப்பான் மக்களே வலிமையாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். ஜப்பானில் இருந்து ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வீடு திரும்பியதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Shreya Ghoshal Viral Clicks! ரசிகர்களை கவர்ந்த அழகான Photoshoot 🔥"

More in Cinema News

To Top