Connect with us

“Thalapathy 68 படத்திற்கு அடுத்து என்ன..? Thug Reply கொடுத்த நடிகர் Mic மோகன்! வைரலாகிவரும் Video!”

Cinema News

“Thalapathy 68 படத்திற்கு அடுத்து என்ன..? Thug Reply கொடுத்த நடிகர் Mic மோகன்! வைரலாகிவரும் Video!”

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, உடை, இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கொண்டாடினார், நடிகர் மோகன். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் நடித்து இன்னும் பெயரிடப்படாத ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் தகவலைக் கொடுத்துள்ளார். அதில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் மோகன் அளித்த பதில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடிகர் மைக் மோகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதின்படி, ”தளபதி 68 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய முதல் படத்திலேயே நான் வில்லனாக நடித்து இருந்தேன். நான் எப்போதுமே ஹீரோவாகவும் வில்லனாகவும் சப்போர்டிவ் ரோல்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் எனக்கு எந்த வேறுபாடும் நடிப்பில் கிடையாது. ஆனால், தளபதி 68ஆவது படத்தில் வில்லனா என்பதை இபோது சொல்லமுடியாது.

என்னுடைய ஹரா படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்சன் பணிகள் போய்க் கொண்டு இருக்கின்றன. விஜய்யுடன் சேர்ந்து தாய்லாந்து செட்யூலில் நடித்து முடித்துவிட்டு வந்திருக்கேன். இப்போது படம் பற்றி எதுவும் பேச முடியாது. படம் ரிலீஸாகும்போது தயாரிப்புத்தரப்பு மற்றும் இயக்குநரின் அனுமதிபெற்று படம் குறித்துப் பேசுகிறேன். இப்போதும் தமிழ்த்திரைப்படங்கள் நன்றாகத்தான் இருக்கிறது. பழையதை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

எனக்கு இப்போதும் பக்கபலமாக இருப்பது எனது ரசிகர்கள் தான். அவர்களுக்காகத்தான் நான் மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளேன்’ என்றார். அப்போது, தளபதி 68க்குப் பிறகு என்ன படத்தில் நடிக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 69ஆவது படம் என கிண்டலாக பதில் சொன்னார், நடிகர் மோகன். மேலும், படம் வரும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என நடிகர் மைக் மோகன் கேட்டுக்கொண்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நெல்சனுக்கும் சுந்தர்சி-க்கும் அடித்த ஜாக்பாட், உறுதியான ரஜினி கமல் கூட்டணி

More in Cinema News

To Top