Connect with us

நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க..! மீண்டும் வில்லங்கமாக பேசிய மன்சூர் அலிகான்!

Cinema News

நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க..! மீண்டும் வில்லங்கமாக பேசிய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகானின் இந்த மோசமான பேச்சுக்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் பதிவிட்ட த்ரிஷா தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது கடவுள் குணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் மரணித்துவிடு என்று சொன்னதை மன்னித்து விடு என்று மக்கள் தொடர்பாளர் தவறாக புரிந்து கொண்டார் என கூறியிருந்தார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தப்பே செய்யாத நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை முழுசா ஒருமுறை பாருங்க, அதுல நான் தப்பா பேசி இருந்தா என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க. மேலும் காவல்நிலையத்திற்கு சென்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தேன் வீட்டிற்கு வந்ததும், நைட் தூக்கம் வரவில்லை.

இதனால், பார்த்திபன் ஸ்டைலில் ஒரு அறிக்கையை என் பிஆர்ஓவிடம் தொலைபேசியில் சொன்னேன். மேலும், சக நடிகை த்ரிஷாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து பல செய்தி வெளிவருகிறது. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு நடிகை தவறு செய்தால், அதில் ஹீரோக்களுக்கும் பெரும் பங்கு இருக்கு என்பதால், த்ரிஷா என்னை மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால், அது மன்னித்துவிடு என்றாகி விட்டது என்று விழுந்து விழுந்து சிரித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்த ஜென்மத்திலும் ரோபோ சங்கராகவே பிறக்க வேண்டும் – உருக்கமான பிரியங்கா!

More in Cinema News

To Top