Connect with us

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

Kavin_Nayanthara

Cinema News

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு குறித்த கிளிம்ப்ஸ் காட்சிகள் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், கவின் அடுத்து வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த விகர்னன் அசோக் என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வெற்றி மாறனே தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கவினுடன் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் இந்த படம் குறித்து ரசிகர்களிடம் தற்போதே எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளியில் ஜெயித்து காட்டிய பைசன், 5 நாட்களுக்குள் வசூலை அள்ளிய மாரி செல்வராஜ்

More in Cinema News

To Top