Connect with us

“கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் முதல் நாள் Box Office Collection இவ்வளவா?!”

Cinema News

“கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் முதல் நாள் Box Office Collection இவ்வளவா?!”

கார்த்தியின் 25வது படம் என்ற ஹைப் உடன் உருவான ஜப்பான். ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் ஜப்பான் படத்துக்கு இசையமைத்துள்ளார். வழக்கமான கமர்சியல் ஜானர் படமாகவே உருவாகியுள்ளது ஜப்பான். நகைக் கடை கொள்ளைகளை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராஜூ முருகன்.

முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நகைக் கடை கொள்ளையன் கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், படம் முழுக்க ஆக்‌ஷன் மோடில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், கார்த்தி மட்டும் வெரைட்டியாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். இந்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி வசூல் இல்லையென சொல்லப்படுகிறது.

கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் வெளியானது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸுடன் மோதிய சர்தார், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. ஆனால், இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் மோதிய ஜப்பான், வசூலில் தடுமாறி வருகிறதாம். அதாவது இந்தப் படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 1.5 கோடியும், மற்றவை எல்லாம் சேர்த்து 1 கோடி வரையும் கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சென்ற ஆண்டைப் போல, இந்த தீபாவளியும் கார்த்தி தான் பாக்ஸ் ஆபிஸ் வின்னராக மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜப்பான் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு பாசிட்டிவான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. இதனால், வரும் நாட்களிலும் ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெரியளவில் இருக்காது எனத் தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் 2 கார்… பின்னால் இருக்கும் அப்பா–அம்மா போராட்டம் | MS Bhaskar Daughter Post 🔥

More in Cinema News

To Top