Connect with us

“பள்ளிப் பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்து வரவேண்டும்! நடிகர் ஜெயம் ரவி கோரிக்கை!”

Cinema News

“பள்ளிப் பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்து வரவேண்டும்! நடிகர் ஜெயம் ரவி கோரிக்கை!”

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, ராதாரவி, தயாரிப்பாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கமல்ஹாசன் பேசியபோது ’விஜயகாந்த் பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்து இருப்பதாகவும், அவர் பட்ட அவமானங்களை வேறு யாரும் படக்கூடாது என நினைத்தார், அவர் கொடுப்பது பிறருக்கு தெரியாது, அவரிடம் எனக்கு பிடித்ததே அவருடைய கோபம்தான், ஆனால் அந்த கோபத்தில் நியாயம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசியது ஜெயம் ரவி ‘எல்லோரும் இறந்த பிறகு தான் கடவுளாக மாறுவார்கள். ஆனால் விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக இருந்திருக்கிறார். எனவே அவரது அவரை பற்றி பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும், சத்ரியனுக்கு சாவே இல்லை என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சிவா பேசிய போது ’நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க விஜயகாந்த் தான் கடுமையாக உழைத்தார் என்றும் நடிகர் சங்கத்திற்காக விஜயகாந்த் தனது ரத்தத்தை சிந்தி இருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை மண்ணில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு - பந்துவீச்சில் அதிரடி காட்டுமா சென்னை..?

More in Cinema News

To Top