Connect with us

“நானி நடிப்பில் வெளியாகவிருக்கும் ஹாய் நன்னா படத்தில் பாடல் ஒன்று பாடிய நடிகர் துருவ் விக்ரம்!”

Cinema News

“நானி நடிப்பில் வெளியாகவிருக்கும் ஹாய் நன்னா படத்தில் பாடல் ஒன்று பாடிய நடிகர் துருவ் விக்ரம்!”

நடிகர் த்ருவ் விக்ரம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ஆதித்ய வர்மா என்ற படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக்காள வெளியானது. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் த்ருவ் விக்ரம். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் வெளியான மகான் படத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார் த்ருவ். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய தந்தையுடன் போட்டிப் போட்டு சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் த்ருவ் விக்ரம்.

தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி போட்டியை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் பன்முகத் திறமை காட்டி வருகிறார் த்ருவ் விக்ரம்.

முன்னதாக சில பாடல்களை பாடியுள்ள அவர், தற்போது பிரபல தெலுங்குப்பட ஹீரோ நானி படத்திற்காக பாடல் பாடியுள்ளார். ஒடியம்மா என்ற இந்தப் பாடல் பார்ட்டி பாடலாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நானியுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் சூட்டிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இந்தப் பாடலில் நானி மற்றும் ஸ்ருதிஹாசனின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இந்நிலையில் இந்தப் பாடலை த்ருவ் விக்ரம் ஸ்ருதியுடன் இணைந்து பாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாடியுள்ளார் த்ருவ் விக்ரம். இந்நிலையில் நானியுடன் த்ருவ் இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top