Connect with us

“இதுக்காகவே வட சென்னை 2 கண்டிப்பா வரும்..! நடிகர் தனுஷ் சொன்ன Surprise!”

Cinema News

“இதுக்காகவே வட சென்னை 2 கண்டிப்பா வரும்..! நடிகர் தனுஷ் சொன்ன Surprise!”

கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக தனுஷின் கேப்டன் மில்லர் வெளியாகவுள்ளது. வரும் 12ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரான் இயக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் கேரியரில் தரமான சம்பவம் செய்த திரைப்படம் வட சென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான வடசென்னை, கேங்ஸ்டர் ஜானரில் கிளாஸிக் கல்ட் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. தனுஷுடன் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். வட சென்னையை பின்னணியாக வைத்து பக்கா கேங்ஸ்டர் மூவியாக உருவாகியிருந்தது.

முதல் பாகத்தில் அமீரின் ராஜன் கேரக்டர் தான் மாஸ் காட்டியிருந்தது. இரண்டாவது பாகத்தில் தான் தனுஷின் அன்பு கேரக்டர் விஸ்வரூபம் எடுக்கும். அதற்கான லீட் உடன் தான் வடசென்னை முதல் பாகம் முடிவுக்கு வந்தது. இதனால் இரண்டாவது பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், வெற்றிமாறனோ விடுதலை, வாடிவாசல் என பிஸியாகிவிட்டதால், வட சென்னை 2 பற்றி இதுவரை அப்டேட் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில், வடசென்னை 2ம் பாகம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். இதனையடுத்து, வடசென்னை 2 கண்டிப்பாக வரும் என கூறிய தனுஷ், இத்தனை நள் உள்ளங்கள் கேட்கும் போது அது நிச்சயம் நடக்கும் என அப்டேட் கொடுத்தார். அப்போது நேரு ஸ்டேடியமே அதிர்ந்தது. முன்னதாக வெற்றிமாறனும் வடசென்னை 2 கண்டிப்பாக வெளியாகும் என கூறியிருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top