Connect with us

“பெரு வெள்ளத்தில் சிக்கிய ஆமிர்கான், விஷ்ணு விஷால்” ஓடி வந்து நலம் விசாரித்த அஜித்..!!

Cinema News

“பெரு வெள்ளத்தில் சிக்கிய ஆமிர்கான், விஷ்ணு விஷால்” ஓடி வந்து நலம் விசாரித்த அஜித்..!!

மிக்ஜாம் புயலால் வெள்ள நீரில் சிக்கி தவித்த பிரபல நடிகர்களான ஆமிர்கான், மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் பேரிடர் மீட்பு குழுவால் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களை நடிகர் அஜித் நேரில் சென்று நலம் விசாரித்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பெரு வெள்ளம் சூழ்ந்தது இதனால் அடிப்படை தேவைகளை கூற பெற முடியாமல் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கனமழை தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளதால் சீரமைக்கும் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுல இந்த சீரமைப்பு பணியில் பல்லாயிரக்கணக்கானோர் முழு வீச்சில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த அசாதரணமான சூழலில் சென்னை காரப்பாக்கம் பகுதியில் நாங்கள் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாகவும் எங்களை விரைந்து வந்து மீட்கவும் நடிகர் விஷ்ணு விஷால் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

விஷ்ணு விஷாலின் அந்த பதிவை கண்ட பேரிடர் மீட்புக்குழு உடனே விரைந்து வந்து நடிகர் விஷ்ணு விஷால் , அருகில் சிக்கி இருந்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோரை காப்பாற்றி படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் காரப்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்த நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்ட செய்தியை அறிந்த நடிகர் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் . இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR–வெற்றிமாறன் அரசன் ஷூட் கோவில்பட்டியில் அதிரடி ஆரம்பம் !

More in Cinema News

To Top