Connect with us

“கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

madhampatty

Cinema News

“கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும், நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையில் நடந்த இரண்டாவது திருமணம் கோலிவுட்டில் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. கிரிஸில்டா ஆண் குழந்தைக்கு தாயானதால், இந்த பிரச்சனை ஓய்ந்து போகலாம் என நினைக்கப்பட்டாலும், விவகாரம் இன்னும் நீள்ந்து கொண்டே வருகிறது. இதற்கிடையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

ஜாய் கிரிஸில்டாவும் ரங்கராஜும் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. திருமணத்திற்குப் பிறகு ரங்கராஜ் தன்னிடம் இருந்து விலகி நடந்து கொள்வது போல தெரிந்ததால், திருமண புகைப்படங்களை ஜாய் வெளியிட்டார். அதோடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். இதனால் விவகாரம் பரபரப்பான திருப்பத்தை எடுத்தது.

madhampatti
madhampatti

ஜாய் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரங்கராஜ் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், கிரிஸில்டா அவரை பற்றி பேசுவதைத் தடுக்க முடியாது என்று கோர்ட் தெளிவாக தெரிவித்தது. இதற்கிடையில் ஜாய் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரங்கராஜ் மீது குற்றச்சாட்டுகளையும் பதிவுகளையும் வெளியிட்டார். அந்த நேரத்தில் அவர் கர்ப்பிணியாக இருந்தார், சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்தபின், இந்த குழந்தை தன்னுடையதுதான் என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக மகளிர் ஆணையம் அறிவித்தது. ஆனால் பின்னர் ரங்கராஜ், திருமணம் மிரட்டலால் நடந்தது, டிஎன்ஏ சோதனை முடிவில் குழந்தை தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என புதிய கூற்றை முன்வைத்தார். இதனால் கோபமடைந்த ஜாய் மீண்டும் கடுமையான பதிவுகளை வெளியிட்டார்.

அவரால் பகிரப்பட்ட வாட்ஸ்அப் ஸ்கிரீன்‌ஷாட்டில், “பிறக்கும் குழந்தை தன்னுடையதுதான், அதற்கான பொறுப்பும் எனக்கு உள்ளது” என்று ரங்கராஜ் முன்பு கூறியிருந்தது தெரியவந்தது. இதை பார்த்த பலர், இப்போது ஏன் அவர் வார்த்தை மாற்றுகிறார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் ரங்கராஜ் வழக்கம்போல ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு அமைதியாகிவிட்டார்.

மற்றுபடி ஜாய் கிரிஸில்டா, தன்னுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளையும் பகிர்கிறார். தற்போது அவர் போட்டுள்ள புதிய இன்ஸ்டா ஸ்டோரி கவனம் ஈர்த்து வருகிறது. அதில்,

“குழந்தை தன்னைப் போல இல்லை என சொல்லப்பட்டால் ஒரு பெண் கோபப்படுகிறாள். ஆனால் அவள் நேசித்த கணவன் முகத்தையே அந்தக் குழந்தை சுமந்து வருவதைக் கண்டு உள்ளுக்குள் பூரித்துப் போகிறாள்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜாய் முன்பு மாதா மாதம் 6.5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் (maintenance) கோரியும் மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

See also  🔥 ஜனவரி 14க்கு வாய்ப்பா? ‘ஜன நாயகன்’ குறித்து புதிய அப்டேட்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top