Connect with us

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை! மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Cinema News

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை! மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தொடர்ந்து வன்முறை திரைப்படங்கள் இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘மாநகரம்’, ’கைதி’, ’மாஸ்டர்’, ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய ஐந்து திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

lokesh

சமீபத்தில் வெளியான ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் மதுரையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் லோகேஷ் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ’லியோ’ திரைப்படத்தில் கலவரம், சட்டவிரோத செயல்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் குற்றங்களை செய்ய முடியும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் இந்த காட்சிகள் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல் தந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்சார் அதிகாரிகள் இதுபோன்ற திரைப்படங்களை முறையாக சென்சார் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், லோகேஷ் கனகராஜ் கனகராஜ்க்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து அவர் வன்முறையை தூண்டும் காட்சிகளை படமாக்கி வருவதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் இந்த வழக்கு இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் அரண்மனை 4 - இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top