Connect with us

70-வது தேசிய திரைப்பட விருதுகள் – விருதுகளை வென்று குவித்த தமிழ் திரை நட்சத்திரங்கள்..!!

Cinema News

70-வது தேசிய திரைப்பட விருதுகள் – விருதுகளை வென்று குவித்த தமிழ் திரை நட்சத்திரங்கள்..!!

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரை நட்சத்திரங்கள் தேசிய விருதுகளை பெரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

இந்திய திரையுலகில் பல மொழி படங்களில் சிறந்து விளங்கும் படங்கள் நடிகர் நடிகைகள் உள்பட பல கேட்டகரிகளில் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருதுகளை பெற்று வருகின்றனர் .

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக நித்யா மேனன் பெற்றார்

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ திரைப்படத்துக்காக ரிஷப் ஷெட்டி பெற்றார்.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக, நடன இயக்குநர் சதீஷ் தேசிய விருது பெற்றார். பாலியல் புகாரில் சிக்கிய ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தமிழ் படமாக ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இயக்குநர் மணிரத்னத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை ரவி வர்மன் பெற்றார்.

சிறந்த சண்டை பயிற்சியாளர் விருதை ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக அன்பறிவ் சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்மீக ஒளியில் மூழ்கிய சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்கை பாருங்க!

More in Cinema News

To Top