Connect with us

70 நாட்கள் பிக்பாஸ் பயணம்… வியானா மற்றும் ரம்யா ஜோ சம்பளம் குறித்து வைரல் தகவல்

Bigboss Season 9

70 நாட்கள் பிக்பாஸ் பயணம்… வியானா மற்றும் ரம்யா ஜோ சம்பளம் குறித்து வைரல் தகவல்

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி அடையாளம். அந்த வரிசையில், 100 நாட்கள் ரசிகர்களை கவரும் நோக்கில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் 9 தற்போது 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் பெறவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. போட்டியாளர்கள் விளையாட்டை விட சர்ச்சைக்குரிய செயல்களில் அதிகம் ஈடுபடுவதால், சில வாரங்களாக டபுள் எவிக்ஷன்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டிலிருந்து வியானா மற்றும் ரம்யா ஜோ ஆகியோர் வெளியேறினர். இவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தகவலின்படி, சுமார் 70 நாட்கள் வீட்டில் இருந்த வியானாவுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், ஒரு நாளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் பேசப்பட்ட ரம்யா ஜோ, 70 நாட்களுக்கு மொத்தமாக ரூ.6 லட்சம் வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  33 ஆண்டுகள் கழித்தும் கஜோல் அழகு குறையவே இல்லை! வைரலான புதிய லுக் 📸

More in Bigboss Season 9

To Top