Connect with us

டி20 உலகக்கோப்பை: இந்தியா–பாகிஸ்தான் மோதல் தேதி மற்றும் அட்டவணை வெளியானது!

Sports

டி20 உலகக்கோப்பை: இந்தியா–பாகிஸ்தான் மோதல் தேதி மற்றும் அட்டவணை வெளியானது!

புதுடெல்லி,
2026 ஆம் ஆண்டுக்கான 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பெரும் தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற முன்னணி அணிகளுடன், வரலாற்றில் முதல்முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி அணியும் இடம்பெறுவது சிறப்பு.
அனைத்து அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்–2 அணிகள் சூப்பர்–8 சுற்றுக்கு முன்னேறும். அங்கிருந்து அரையிறுதி, இறுதி என உலகக் கோப்பை பரபரப்பாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், முழு அட்டவணை இன்னும் வெளியிடப்படாதபோதிலும், இந்தியா அணியின் லீக் போட்டிகள் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் உள்ளதால், இரு நாடுகளின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த ஹை-வோல்டேஜ் மோதல் பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது. இது தொடரின் மிகப்பெரிய கிளாஷ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ இந்தியா அணியின் 2026 டி20 உலகக் கோப்பை லீக் போட்டிகள்:

  • இந்தியா vs அமெரிக்கா – பிப்ரவரி 8 (அகமதாபாத்)
  • இந்தியா vs நமீபியா – பிப்ரவரி 12 (டெல்லி)
  • இந்தியா vs பாகிஸ்தான் – பிப்ரவரி 15 (கொழும்பு)
  • இந்தியா vs நெதர்லாந்து – பிப்ரவரி 18 (மும்பை)

இந்த முறை சொந்த மண்ணில் நடக்க இருப்பதால், இந்தியாவின் பயணம் குறித்து ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ரோகித்தை முந்தி மிட்செல் முதலிடம்

More in Sports

To Top