Connect with us

“19 Years of Dhonism: யாராலும் முறியடிக்கப்படாத தல தோனியின் Top சாதனைகள்!”

Sports

“19 Years of Dhonism: யாராலும் முறியடிக்கப்படாத தல தோனியின் Top சாதனைகள்!”

200 ஒருநாள் போட்டிகள், 70 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிரள் உட்பட, 332 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் மகேந்திர சிங் தோனி. இதன்மூலம், கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டவர் அவர்தான். அடுத்த நிலையில், ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார்.

பினிஷிங்கில் சிக்ஸர் கிங் என்று புகழ்பெற்ற தோனி, கேப்டனாக 210 சிக்ஸர்களை அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து அனைவரும் அறிந்ததுதான்.

சர்வதேச போட்டிகளின் அனைத்து பார்மட்டுகளிலும் 178 ஸ்டம்பிங் செய்து சாதனை செய்துள்ளார். தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை பலமுறை பார்த்துள்ளோம். இருப்பினும், கிரிக்கெட் வரலாற்றில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு (2018) எதிராக 0.08 வினாடிகளில் அதிவேக ஸ்டம்பிங் செய்த தோனியின் அந்த சாதனை பலராலும் இன்றும் கொண்டாடப்படுகிறது, முறியடிக்கப்படாதது.

டோனியின் பினிஷிங் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றவர் என்ற அவரது சாதனை அதனை உறுதிப்படுத்துகிறது. 84 முறை ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றிருக்கிறார் தோனி.

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, 7ஆவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தவர். இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை, மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக தோனி மட்டுமே உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top