Connect with us

“இயக்குனர் சிம்புதேவனின் Boat பட Teaser வெளியானது!”

Cinema News

“இயக்குனர் சிம்புதேவனின் Boat பட Teaser வெளியானது!”

தளபதி விஜய் நடித்த ’புலி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் 8 ஆண்டுகளுக்கு பின் இயக்கிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது. வடிவேலு நடித்த ’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன்.

இதனை அடுத்து அவர் ’அறை எண் 305ல் கடவுள்’, ’இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ’ஒரு கன்னியும் மூன்று காவலனும்’ போன்ற படங்களை இயக்கினார். இதனை அடுத்து அவர் 2015 ஆம் ஆண்டு விஜய் நடித்த ’புலி’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் எதிர்பார்த்து வெற்றியைப் பெறவில்லை.

இதன் பிறகு ஒரு சில ஆந்தாலஜி படங்களை இயக்கினாலும் 8 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ’போட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தில் யோகி பாபு நாயகனாகவும் கௌரி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இதற்கு தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஒரு நெய்தலின் கதை என்ற கேப்ஷனுடன் வெளியாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலான நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top