Connect with us

சர்ச்சையில் சிக்கிய துல்கர் சல்மான் படம் – ‘காந்தா’ வெளியீடு ஒத்திவையுமா?

kantha

Cinema News

சர்ச்சையில் சிக்கிய துல்கர் சல்மான் படம் – ‘காந்தா’ வெளியீடு ஒத்திவையுமா?

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இப்படத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் பான்-இந்தியா அளவில் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேன் தியாகராஜன், இந்தப் படத்துக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர்,

“பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்கும் போது அவர்களின் சட்டபூர்வ வாரிசுகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ‘காந்தா’ படத்தில் பெயர்கள் மாற்றப்பட்டிருந்தாலும், கதாபாத்திரங்கள் எளிதில் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், பாகவதர் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்தார், கடனில் சிக்கி வறுமையில் இறந்தார் என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. அவர் செல்வந்தர்; பங்களா, விலையுயர்ந்த கார்கள் அனைத்தும் அவரிடம் இருந்தன. அவருக்கு எந்தத் தீய பழக்கமும் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், உண்மைக்கு புறம்பாகவும் அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதால், ‘காந்தா’ திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நடிகர் துல்கர் சல்மானுக்கும் நோட்டீஸ் அனுப்பி, பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. வழக்கு நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், திட்டமிட்டபடி நவம்பர் 14 அன்று ‘காந்தா’ படம் வெளியாகுமா என்பதில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் D54: படப்பிடிப்பு காட்சிகள் லீக்! ரசிகர்களுக்கு எச்சரிக்கை

More in Cinema News

To Top