Connect with us

நீலாம்பரியின் பழிவாங்கல் தொடருமா? படையப்பா ரீ-ரிலீஸ் பிறகு வெடித்த பாகம் 2 பேச்சு

Cinema News

நீலாம்பரியின் பழிவாங்கல் தொடருமா? படையப்பா ரீ-ரிலீஸ் பிறகு வெடித்த பாகம் 2 பேச்சு

1999ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், தமிழ்த் திரையுலகில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக மாறியது. ரஜினியின் மாஸ் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நீலாம்பரி கேரக்டர், கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என அனைத்தும் சேர்ந்து அந்தப் படத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக மாற்றியது.

சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது, பழைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஜென் Z இளைஞர்களும் தியேட்டர்களில் உற்சாகமாக கொண்டாடினர். முதல் வெளியீட்டின்போதிருந்த அதே கொண்டாட்டம் இப்போதும் திரும்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த ரீ-ரிலீஸை முன்னிட்டு வெளியான ரஜினியின் புரமோஷன் வீடியோவில்,
“அடுத்த ஜென்மத்திலாவது உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன்” என நீலாம்பரி சொல்வதோடு படம் முடிவடைகிறது. மேலும், படையப்பா 2 குறித்து கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என ரஜினி கூறியதுதான் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இதனால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் படையப்பாவில் காமெடி ரோலில் கலக்கிய நடிகர் செந்தில், படையப்பா 2 குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “படையப்பா 2 எடுத்தால், அதே கேரக்டராக இருந்தாலும் சரி, பக்கத்தில் நிற்கும் கேரக்டராக இருந்தாலும் சரி… நான் கண்டிப்பாக நடிப்பேன்” என ஓபனாக தெரிவித்தார்.

சினிமாவிலிருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த செந்தில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படையப்பா 2 உண்மையாகவே உருவாகுமா? செந்தில் உட்பட பழைய நட்சத்திரங்கள் மீண்டும் திரையில் ஒன்றாக தோன்றுவார்களா? என்ற கேள்விகளோடு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Rowdy Janardhan Buzz 🚀 Vijay Deverakondaக்கு எதிரி Vijay Sethupathi!

More in Cinema News

To Top