Connect with us

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? வடிவேலு வெளிப்படுத்திய உண்மை

Cinema News

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? வடிவேலு வெளிப்படுத்திய உண்மை

தமிழ் சினிமாவின் ‘கேப்டன்’ என மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விஜயகாந்த், தனது அரசியல் பயணத்திலும் அதே உற்சாகத்துடன் மக்கள் சேவைக்காக போராடினார். தேமுதிக கட்சியை துவங்கிய சில காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் அவரை படிப்படியாக சினிமா மற்றும் அரசியலிலிருந்து விலகச் செய்தன. இதன் பின்னர், 2023ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.

அவரது மறைவுச் செய்தி நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியதுடன், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். திரையுலக பிரபலங்களும் பலர் வந்து மரியாதை செய்தனர். ஆனால் கேப்டனின் படங்களில் பல வாய்ப்புகள் பெற்று பிரபலமாகிய வடிவேலு வராதது பலரிடமும் கேள்விகளை எழுப்பியது.

இதுகுறித்து சமீபத்தில் ‘மாரீசன்’ படப்பிடிப்பில் வடிவேலு, இணை நடிகர்களுடன் பேசும் போது தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் வடிவேலுவின் மகனாக குரு லக்ஷ்மன் நடித்துள்ளார். அவரிடம் வடிவேலு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது:

“மனுஷன் இறந்ததுக்கு கூட நான் போக முடியல. நான் போயிருக்கலாம்… நான் போயிருந்தாலும், ‘இவ்ளோ நாளா திட்டிட்டுட்டு எதுக்கு வந்திருக்கான்’னு தப்பாகத்தான் பேசுவாங்க. ஆனா மனதார சொல்றேன்… அவர் நல்லவரு, சொர்கத்தில்தான் இருப்பாரு,” என அவர் உருக்கமாகப் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலின் “மருதநாயகம்: புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெறுமா?”

More in Cinema News

To Top