Connect with us

வாட்டர் மெலன் ஸ்டாரின் புதிய சர்ச்சை – பிக்பாஸில் கோமாளித்தனம் உச்சம்!

watermelon

Bigboss Season 9

வாட்டர் மெலன் ஸ்டாரின் புதிய சர்ச்சை – பிக்பாஸில் கோமாளித்தனம் உச்சம்!

Bigg Boss 9 Tamil: பிக்பாஸ் சீசன் 9ல் “வாட்டர் மெலன் ஸ்டார்” திவாகர் வந்தது முதல், வீடு முழுக்க சலசலப்பாகி விட்டது. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களால் பிரபலமான இவர், வீட்டுக்குள் நுழைந்த பிறகு போட்டியாளர்களிடம் “உங்களுக்கு என்ன தராதரம் இருக்கிறது?” என்று அடிக்கடி பேசுவது பலருக்கு எரிச்சலாகியுள்ளது. விஜய் சேதுபதி நேரடியாக அவரை எச்சரித்தும், அவர் தனது போக்கை மாற்றவில்லை.

மனோவின் முன் நடிப்பில் அதிர்ச்சி!

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் பின்னணி பாடகர் மனோ. அவரை பார்த்த திவாகர், “சார், நான் சிவாஜி மாதிரி நடிப்பேன்… நீங்க வாசிங்க!” என்று கூறி, கர்ணன் பட பாடலுக்கு மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகளுடன் நடித்தார். மனோவோ அதை பார்த்து அதிர்ச்சியில் சிரித்தபடி “நல்லா நடிச்சீங்க” என்று ஃபார்மாலிட்டிக்காக கூறியதும் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

சோஷியல் மீடியாக்களில் வைரல் வீடியோ

மனோவின் முக ரியாக்‌ஷன் இப்போது சமூக வலைத்தளங்களில் மீமாக பரவி வருகிறது. “திவாகர் என்ன மாதிரி நடிச்சார்!” என்று ரசிகர்கள் சிரிப்புடன் பகிர்ந்து வருகின்றனர். சிலருக்கு இது நகைச்சுவையாக இருந்தாலும், பலர் இதை பிக்பாஸ் வீட்டில் தேவையற்ற கோமாளித்தனமாகவே பார்க்கிறார்கள். வாட்டர் மெலன் ஸ்டாரின் பிரபலம் இப்போது சர்ச்சையுடனும் சேர்ந்தே வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஆட்டோகிராப் — ஒரு காலத்தைக் கடந்த காதல்!”

More in Bigboss Season 9

To Top