Connect with us

‘தங்கலான்’ டப்பிங் பணியில் சீயான் விக்ரம் – வைரல் போட்டோஸ்

Cinema News

‘தங்கலான்’ டப்பிங் பணியில் சீயான் விக்ரம் – வைரல் போட்டோஸ்

தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தின் டப்பிங் பணியில் சீயான் விக்ரம் இணைந்துள்ள புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் . சீயான் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் மாறுபட்ட வேடங்களுக்கு பெயர் போன மனிதர் .

பல படங்களில் பல விதமான கெட்டப்புகளை போட்டு ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இந்த நடிப்பு அரக்கனின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தான் தங்கலான் .

புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் மாளவிகா மோகன் உள்படம் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 26-1-24 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தழுவிய கதை என்பதால் இப்படத்திற்காக படக்குழு நிறைய மெனக்கெடல்களை செய்துள்ளது அண்மையில் வெளியான டீசரில் நன்றாக தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நம்ப சீயான் எந்த மாதிரியான பாஷையை பேசப்போகிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தங்கலான் படத்தின் டப்பிங் பணியில் அவர் இணைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top