Connect with us

“விஜய்சேதுபதி மகன் நடிக்கும் ‘Phoenix’ படத்தின் Shooting இன்று பூஜையுடன் தொடங்கியது!”

Cinema News

“விஜய்சேதுபதி மகன் நடிக்கும் ‘Phoenix’ படத்தின் Shooting இன்று பூஜையுடன் தொடங்கியது!”

தமிழ் சினிமாவில், தென் மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. தொடர்ந்து பீட்சா, சூதுகவ்வும், சேதுபதி என பல படங்களில் நடித்தவர், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்தார். முழு நேர கதாநாயகனாக இவர் நடித்து, அண்மையில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்கள் தோல்வியை மட்டும் சந்தித்து இருக்கிறது.

ஆகையால் விஜய்சேதுபதி முழு நேர கதாநாயகான தன்னை நிலைநிறுத்திக்கொள், அவர் ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக மகாராஜா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகனான சூர்யாவும் திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தத்திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சி இயக்குநரான அனல் அரசு இயக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு ஃபீனிக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சூர்யா நானும் ரெளடிதான், சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் மகன் சஞ்சயும் திரைத்துறையில் இயக்குநராக அறிமுக இருப்பதாவும், இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சஞ்சயையும், சூர்யாவையும் ஒப்பிட்டு, சஞ்சய் தகுதியான நபர், ஆனால் சூர்யாவை திரைத்துறைக்குள் கொண்டு வந்திப்பது முழுக்க முழுக்க வாரிசு அரசியலை உள்ளடக்கியது என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் அடித்திருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top