Bigg Boss 9 Tamil: இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கொண்டு வந்து வெற்றியை கொடுத்தவர் கமலஹாசன். அதனால் தான் தொடர்ந்து பல சீசன்களையும் தாண்டி தற்போது ஒன்பதாவது சீசனில் வந்து நிற்கிறது. ஆனால் இதோடு ஊத்தி மூடிவிடும் போல அந்த அளவிற்கு சீசன் 9 மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.
bigg boss (1)
ஒரு ரியாலிட்டி ஷோ குடும்பத்துடன் பார்ப்பார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் வரம்புக்கு மீறி பல விஷயங்கள் நடைபெறுகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பது வழக்கம். அதை கெடுத்துக் கொள்ளும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மோசமான விஷயங்கள் வருகிறது.
அதாவது ஆதிரை, மற்ற ஆண் போட்டியாளர்களை பற்றி கொச்சையாக பேசியதால் சர்ச்சைக்குள்ளாய் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் டபுள் மீனிங் வார்த்தைகள், எல்லை மீறியான விஷயங்களை செய்வதை பார்த்துக்கொண்டு சகிக்க முடியவில்லை என்று நெடிஷன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் தமிழ் கலாச்சாரத்தையே கெடுக்கும் விதமாக ஒரு ரியாலிட்டி இருக்கிறது என்று மொத்த நெகட்டிவ் விமர்சனமும் இந்த சீசன் வாங்கிக் கொண்டு வருகிறது.
இதையெல்லாம் கண்டும் காணாமலும் விஜய் சேதுபதி இருக்கக்கூடாது இந்த வார இறுதியில் இதையெல்லாம் கண்டிக்கும் விதமாக பேச வேண்டும். அத்துடன் கலாச்சாரத்தையும் குடும்பத்துடன் பார்க்கும் விஷயத்தை மறந்து விடவும் கூடாது என்று கண்டிக்கும் விதமாக விஜய் சேதுபதி ஆதிரை இடமும் மற்ற போட்டியாளர்களிடமும் தெளிவாக கூற வேண்டும் என்று கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்து விட்டது.
இதுவரை ரியல் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை கட்டிக்காட்டுத்துக் கொண்டு வந்த பெருமை கமலை சாரும். ஆனால் இதை கெடுக்கும் விதமாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது சரியாக இல்லை என்றும் விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….