Connect with us

நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

Politics

நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

TVK Vijay: தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போது சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மக்கள் சந்திப்பு, பகுதி அலுவலகங்கள் திறப்பு, உறுப்பினர் சேர்க்கை என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கட்சியின் அமைப்பு வலுவாகி வருகிறது.

ஆனால் கரூரில் நடந்த துயரச்சம்பவம் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சோகத்திலிருந்து மெதுவாக மீண்டு வரும் த.வெ.க., மக்கள் நலனில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக அமைதியாகவும் ஒழுங்காகவும் கட்சி பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதை விஜய் தன் நிர்வாகிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

tvk vijay
tvk vijay

இதற்கிடையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், த.வெ.க. தனது தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. நவம்பர் 6 அல்லது 11-ஆம் தேதியன்று கட்சித் தலைவர் விஜய் தாமாகவே தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் வட்டாரங்களின் தகவலின்படி, த.வெ.க. ஏற்கனவே 5 சின்னங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளது — ‘விசில்’, ‘பேட்’, ‘உலக உருண்டை’ உள்ளிட்டவை அதில் அடங்கும். தேர்தல் ஆணையம் இதில் எதனை ஒதுக்கினாலும், அதையே தங்களது அடையாள சின்னமாக ஏற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான விண்ணப்பப் படிவங்கள், தேவையான ஆவணங்கள் அனைத்தும் தற்போது கட்சியின் சட்ட மற்றும் நிர்வாகக் குழுவினரால் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 6 அல்லது 11 ஆம் தேதி த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று அதிகாரப்பூர்வமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் நடைமுறைக்கு ஏற்ப, நவம்பரில் விண்ணப்பித்தால் 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் சின்னம் ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மிகப்பெரிய அளவில் துவக்க விஜய் தயாராகி வருகிறார்.

இதன் மூலம் த.வெ.க. தனது அரசியல் பயணத்தின் புதிய கட்டத்தை நவம்பரில் தொடங்கவிருக்கிறது என கூறலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்டா பகுதிக்கு புயலாய் வந்த எடப்பாடி! 🔥 திமுக கோட்டையில் அதிமுக அதிரடி – பின்னணி தகவல் வெளிச்சம்!

More in Politics

To Top