Connect with us

சிபிஐ விசாரணைக்கு பின் பல்டி அடித்த அரசியல் தலைவர்கள் – விஜய் இதிலிருந்து பாடம் பெற வேண்டியது அவசியம்!

Politics

சிபிஐ விசாரணைக்கு பின் பல்டி அடித்த அரசியல் தலைவர்கள் – விஜய் இதிலிருந்து பாடம் பெற வேண்டியது அவசியம்!

உச்சநீதிமன்றம் கரூர் நெரிசல் பலி வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததை நடிகரும் தவெகத் தலைவருமான விஜய் “நீதி வெல்லும்” என வரவேற்றார். இதை தவெக ஆதரவாளர்களும் பெரிதும் கொண்டாடினர். ஆனால், கடந்த கால அனுபவங்களைப் பொருத்தவரை சிபிஐ விசாரணைக்குப் பிறகு பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, விஜய் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, 2014க்குப் பிறகு மத்திய ஏஜென்சிகளின் விசாரணைக்கு உட்பட்ட 25 முக்கிய அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் மூன்று பேரின் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன; மற்ற 20 வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்த வழக்குகளில் பெரும்பாலானவை எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்தவை என்ற தரவுகளும் வெளிவந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு. 2022–23 காலகட்டத்தில் அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. பின்னர், அஜித் பவார் தலைமையிலான NCP பிரிவு NDA கூட்டணியில் இணைந்தது. இதன்பின் அஜித் பவார் மற்றும் பிரபுல் படேல் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 12 முக்கிய அரசியல்வாதிகளில் 11 பேர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். அதேபோல், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் சவான் பாஜகவில் இணைந்ததும், அவர்மீது இருந்த வழக்குகளும் தடை செய்யப்பட்டன.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, நாரதா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தபோதும், பாஜகவில் இணைந்த பிறகு வழக்கு விசாரணை நின்றுவிட்டது. அதேபோல், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது இருந்த சிட் ஃபண்ட் வழக்கும் 2015இல் பாஜகவில் சேர்ந்த பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே, கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றிருப்பது திமுகவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், பாஜக இதை எதிர்கால கூட்டணிக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் எனவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம்? அதிமுகவுக்கு மீண்டும் வாய்ப்பு – திமுக கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை!

More in Politics

To Top