Connect with us

ரஜினி மகள்களைப் பற்றி தனுஷ் பேசிய வீடியோ வைரல்!

Cinema News

ரஜினி மகள்களைப் பற்றி தனுஷ் பேசிய வீடியோ வைரல்!

Dhanush: தனுஷ், தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு பாணியால் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தவர். அவர் நடிகராக மட்டுமல்ல, பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், இவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சொல்லும்போது அதில் ரஜினி குடும்பத்தின் பெயர் தானாகவே வரும்.

2004-ம் ஆண்டு “காதல் கொண்டேன்” படத்தின் போது தனுஷும், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலில் விழுந்தனர். ரஜினி குடும்பத்தாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனுஷ், ரஜினியின் மருமகனாக ஆனார் என்றாலும், “பெரிய வீட்டின் நிழலில் வளர வேண்டாம்” என்ற தன்னம்பிக்கையுடன், தனது திறமையால் தனி அடையாளத்தை உருவாக்கினார்.

ஐஸ்வர்யாவும் அதற்கு உறுதுணையாக இருந்தார். திருமண வாழ்க்கையில் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது உறவில் சிறிய பிளவுகள் தோன்றி, அவை பெரிதாகி, இறுதியில் விவாகரத்து என முடிந்தது. இருவரும் இப்போது தனித்தனியாக வாழ்ந்தாலும், தங்களது குழந்தைகளுக்கு கோ-பேரண்டிங் முறையில் அன்பாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த விவாகரத்துக்கு பிறகு, பல காரணங்கள் மீடியாக்களில் பரவின. லதா ரஜினிகாந்த் தனுஷின் குடும்பத்தை மதிக்கவில்லை என்பதிலிருந்து, கஸ்தூரி ராஜா ரஜினியின் பெயரில் கடன் வாங்கி சிக்கலில் சிக்கினார் என்பதுவரை பல்வேறு யூகங்கள் வந்தன. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பதை குடும்பத்தினர் மட்டுமே அறிவார்கள்.

இதற்கிடையில், ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய “வேலையில்லா பட்டதாரி 2 (VIP 2)” படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி தனுஷ் அளித்த ஒரு பழைய பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“சௌந்தர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ‘சார், என்ன அங்கே பிரச்னை? யார் அந்த பர்ப்பிள் ஷர்ட்? என்ன அண்ணா நடக்குது?’ என்று கேட்கிக்கொண்டே இருப்பார். அந்த பர்ப்பிள் ஷர்ட் ஆள் எங்கோ தள்ளிப் போய்க்கொண்டிருப்பார். அவர் போன திசையிலும் இவர் கேள்விகள் கேட்டு வருவார். நாங்கள் நடிகர்கள் எல்லாம் நடிப்பதில் மூழ்கியிருப்போம்… ஆனா எங்களுக்கெல்லாம் மரியாதையே இருக்காது!”

இந்த நகைச்சுவைச்சொல்லும் போது கூட தனுஷின் முகத்தில் இருந்த சிரிப்பு, அவரது இயல்பான நம்பிக்கை, செம்மையாக வெளிப்பட்டது. ஆனால், தற்போது அந்த வசனம் அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலையோடு ஒப்பிட்டு மீம் பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த், தன் முதல் திருமணமான அஷ்வின் ராம்குமாருடன் விவாகரத்து பெற்ற பின், தொழிலதிபர் விசாகன் வனங்கமுடியை திருமணம் செய்து தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

See also  பாலிவுட்டுக்கு தாவும் சிவகார்த்திகேயன், இயக்குநரை சந்தித்த SK

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top