Connect with us

பொங்கல் போட்டியில் பங்கேற்கும் வணங்கான் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

பொங்கல் போட்டியில் பங்கேற்கும் வணங்கான் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா . இதுவரை தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே வணங்கான் .

அருண்விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் கைகோர்க்க இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கமிட்டாகி நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது .

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் அவரது 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து அவருக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது .

அதன்படி இப்படம் வரும் 2025 ஜன-10 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top