Connect with us

இவங்க தான் டாப் 5!– ஆதிரையின் ஆழமான பேட்டி வைரலாகிறது!

adhirai

Bigboss Season 9

இவங்க தான் டாப் 5!– ஆதிரையின் ஆழமான பேட்டி வைரலாகிறது!

Bigg Boss 9 Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்களை கடந்துவிட்டு, தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த சீசன் போட்டியாளர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் வீடைவிட்டு வெளியேறி வருவது வழக்கமாகி விட்டது.

இந்த நிலையில், மூன்றாவது வாரத்தில் ஆதிரை வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர், விஜய் டிவிக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. அந்த பேட்டியில் அவர் தனது விளையாட்டு, மற்ற போட்டியாளர்கள் பற்றிய மதிப்பீடுகள், மேலும் டாப் 5 யார் என்கிற கணிப்புகள் ஆகியவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

“முதல் வாரத்தில் நான் எனது ஆட்டத்தை ஆடினேன். இரண்டாவது வாரத்தில் கொஞ்சம் டவுன் ஆனேன். மூன்றாவது வாரத்தில் மீண்டும் என் பழைய ஆட்டத்துக்கு திரும்பினேன். அதே நேரத்தில், நான் வெளியேறியது எனக்கே ஒரு பெரிய ஷாக். நான் வீட்டில் தொடர்ந்திருக்க வேண்டியவர் என்று நம்புகிறேன்.

adhirai
adhirai

நான் விளையாடிய அளவுக்கு கலையரசன் கூட விளையாடி இருக்க மாட்டார். எனவே, என் எலிமினேஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்று ஆதிரை கூறினார். அதோடு, வீட்டுக்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஆதிரை சில நேரடி கருத்துக்களையும் கூறினார்:

“பார்வதி இயல்பாக இல்லாமல் நடிப்பதற்கு பழக்கப்பட்டவர். காலை வேறு மாதிரி, மாலை வேறு மாதிரி.”

“கமருதீன் வீட்டின் விஷம் மாதிரி. யாராவது கருத்து சொன்னாலே கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறார்.”

“கலையரசன் வீட்டில் சும்மா அமைதியாக இருப்பவர் — மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு நேரத்தை கழிப்பார்.”

“கனி அன்பின் உருவம். எப்போது கண்டிக்க வேண்டுமோ அப்போது கண்டிப்பார், எப்போது பாசம் காட்ட வேண்டுமோ அப்போது பாசம் காட்டுவார்.”

“சபரி வீட்டின் நாட்டாமை. எல்லாவற்றையும் அமைதியாக கவனிப்பவர்.”

டாப் 5 ஆக வரப்போகும் போட்டியாளர்கள்

பேட்டியின் முடிவில், இந்த சீசனில் டாப் 5 இடத்தை பிடிக்கும் திறமையுள்ள போட்டியாளர்கள் யார் என்று ஆதிரை தனது கணிப்பை வெளிப்படுத்தினார்.

“எஃப்.ஜே, கனி, சபரி, கெமி, சுபிக்ஷா — இந்த ஐந்து பேருக்கும் டாப் 5ல் இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. திறமையும், பொறுமையும், ரசிகர்களின் ஆதரவும் இவர்களுக்கு அதிகம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதலில் ஹீரோ, அடுத்தது கைதி 2 — லோகேஷ் மாஸ்டர் பிளான் என்ன?

More in Bigboss Season 9

To Top