Connect with us

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு! மருத்துவமனை சென்று பார்த்துவரும் திரையுலக பிரபலங்கள்!

Cinema News

கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு! மருத்துவமனை சென்று பார்த்துவரும் திரையுலக பிரபலங்கள்!

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து நடிகர் சங்க தலைவர் நாசர்,பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

தற்போது விஜயகாந்த் அவர்களால் பேச முடியாத நிலை இருப்பதால் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் அவர்கள் உடல்நிலை கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவுக்கு வரப்போகும் புதிய பாதை! அஜித் குமார்’s F1 ரேசிங் கனவு

More in Cinema News

To Top