Connect with us

“மீண்டும் மாஸ் திருவிழா… அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸில் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டம்”

Cinema News

“மீண்டும் மாஸ் திருவிழா… அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸில் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டம்”

தமிழ் சினிமாவின் மாஸ் ஐகானாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அஜித் குமார் நடித்த மங்காத்தா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதலே பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட்ட நிலையில், விசில் சத்தம், கைதட்டல், பேனர்–போஸ்டர் அலங்காரம், பட்டாசு வெடிப்புகள் என திரையரங்குகள் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.

வில்லன் வேடத்தில் அஜித் எடுத்த மாஸ் அவதாரம், அவரது ஸ்டைல், வசனங்கள், பின்னணி இசை ஆகியவை இன்றளவும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ரீ-ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் முதல் காட்சி போலவே ரசிகர்கள் திரையரங்குகளை நிரப்பி, ஒவ்வொரு முக்கிய காட்சிக்கும் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த கொண்டாட்டம், மங்காத்தா படம் காலத்தை தாண்டியும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், சமூக வலைதளங்களிலும் மங்காத்தா தொடர்பான தியேட்டர் ரியாக்ஷன் வீடியோக்கள், ரசிகர்களின் கொண்டாட்ட காட்சிகள், டயலாக் கிளிப்புகள் என பல பதிவுகள் வைரலாகி வருகின்றன. ரீ-ரிலீஸிலும் இப்படியான வரவேற்பை பெறுவது, அஜித்தின் ரசிகர் பலத்தையும் மங்காத்தா படத்தின் நீடித்த மாஸ் புகழையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன் இசை விழாவில் மமிதா பைஜூ… வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்

More in Cinema News

To Top