Connect with us

மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்தது – ஜாய் கிரிஸில்டா தாயானார்!

madhampatti

Cinema News

மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்தது – ஜாய் கிரிஸில்டா தாயானார்!

Madhampatty Rangaraj: பிரபல சமையல் நிபுணரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது “திருமண மோசடி” குற்றச்சாட்டில் புகார் அளித்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தற்போது தாயானார். ஆண் குழந்தை பிறந்தது குறித்து ஜாய் கிரிஸில்டா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்குக் கீழ் ஏராளமான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராமில் மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமண உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த பதிவில், ரங்கராஜ் தன்னுடன் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தாம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பின்னர், ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என குற்றஞ்சாட்டி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரில், ரங்கராஜ் தன்னுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும், பல முறை தன்னை கருவுற்று பின்னர் தனது வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

madhampatti
madhampatti

முதலில், ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறையினர் விசாரணை ஆரம்பித்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர் சுமார் 6 மணி நேரம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், மற்றும் பிற ஆதாரங்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அதன்பின், இரண்டாவது கட்ட விசாரணையும் நடந்தது. அதில் இருவரும் – ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜும் – ஆஜராகினர். விசாரணை முடிவடையாமல் இன்னும் தொடர்ந்துகொண்டு இருப்பதாகவும், “இறுதியாக என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை விசாரணை முடிந்தபின் மட்டுமே பகிர முடியும்,” என ஜாய் கூறியிருந்தார்.

இதற்கு முன்னதாக, ஜாய் கிரிஸில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தாம் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தற்போது தொழில் (ஆடை வடிவமைப்பு) செய்ய முடியவில்லை எனவும், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதால், அவரே மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் அத்தியாவசியச் செலவுகளுக்காக மாதம் ₹6,50,000 பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இனி என்ன நடக்கப் போகிறது?

இப்போது, ஜாய் கிரிஸில்டா தாயானதுடன், வழக்கில் புதிய திருப்பம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. ரங்கராஜ் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இந்நிலையில், விசாரணை முடிவுகள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இவ்வழக்கின் திசையை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

See also  ரஜினி மகள்களைப் பற்றி தனுஷ் பேசிய வீடியோ வைரல்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top