Connect with us

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குப்பைகள், விளாசிய சீரியல் நடிகை

bigg boss

Cinema News

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குப்பைகள், விளாசிய சீரியல் நடிகை

Bigg Boss 9: பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே முதலில் நினைவுக்கு வருவது விஜய் டிவிதான். பல வருடங்களாக தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு சீசனும் புதிய போட்டியாளர்களுடன், புதுமையான சண்டைகள் மற்றும் சர்ச்சைகளால் ரசிகர்களை ஈர்த்துவருகிறது.

இந்த வருடம், அதாவது 2025-ல், பிக்பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பமானது. 7 சீசன்கள் வரை இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது 8 மற்றும் 9வது சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்திலிருந்தே சண்டை, வாக்குவாதம், குழப்பம் என நிகழ்ச்சி முழுவதும் சர்ச்சைகளால் நிரம்பி காணப்படுகிறது.

இத்தனை சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த 9வது சீசன் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதே சூழலில், பிரபல தொலைக்காட்சி நடிகை லட்சுமி தன்னுடைய சமூக ஊடக கணக்கில் இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று கேவலத்தின் உச்சக்கட்டமாக மாறிவிட்டது. உங்கள் வீட்டு குழந்தைகள் இதைப் பார்க்கிறார்களா இல்லையா என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். சிறிதளவு சமூக அக்கறை இருந்தால், இதை எப்படி அனுமதிக்க முடியும்? உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள் போல நடந்து கொள்கிறார்கள். அவர்களை வெளியே தூக்கி போட்டு சுத்தம் செய்ய வேண்டும்”

அவர் மேலும் கூறியதாவது, ஒரு பாடலில்கூட தவறான வரி வந்தால் மாதர் சங்கங்கள் குற்றம் சாட்டும். ஆனால் இப்படி ஒரு பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வளவு அசிங்கமான வார்த்தைகள், நடத்தை எல்லாம் நடக்கிறது. இப்போ அந்த அமைப்புகள் எங்கே? இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அசிங்கமாக பேசுபவர்களை, நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

லட்சுமியின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பலர் அவருக்கு ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள்.ஆனால் எதுவாக இருந்தாலும், பிக்பாஸ் 9 சீசன் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி, விஜய் டிவி இதை எப்படி கையாளப்போகிறது என்பதே ரசிகர்களிடையே பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிகப் பெரிய ஓடிடி ரிலீஸ், லோகா Chapter 1 சந்திரா

More in Cinema News

To Top