Connect with us

அசுர வெற்றி பெற்ற போதிலும் தங்கலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – என்ன மாட்டர் தெரியுமா..?

Cinema News

அசுர வெற்றி பெற்ற போதிலும் தங்கலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – என்ன மாட்டர் தெரியுமா..?

சீயான் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த தங்கலான் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று சுட சுட வந்துள்ளது.

பா.ரஞ்சித்தின் அற்புதமான இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தில்லான தயாரிப்பில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்களின் அசர வைக்கும் நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் தரமாக தயாரான இருப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டயகிளப்பியது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம் 100 கோடி மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படம் இன்று வரை OTT யில் வெளியாகாமல் இருக்கும் நிலையில் இப்படத்தை OTT யில் வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவம் குறித்து நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறி .தங்கலான் படம் OTT தளத்தில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Cinema News

To Top