Connect with us

“Thalaivar 170 படத்தின் தலைப்பு, டீசர் இன்று வெளியீடு! பிறந்தநாள் Special!”

Cinema News

“Thalaivar 170 படத்தின் தலைப்பு, டீசர் இன்று வெளியீடு! பிறந்தநாள் Special!”

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல பிறந்தநாள் டீசர் வீடியோவும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ‘தாய் கிழவி’ – பெண்மையின் வலிமையை கொண்டாடும் மனதை கொள்ளை கொள்ளும் படம்!

More in Cinema News

To Top