Connect with us

“அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது என்ன புது குழப்பம்?! உண்மையை உடைத்து சொன்ன நபர்!”

Cinema News

“அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது என்ன புது குழப்பம்?! உண்மையை உடைத்து சொன்ன நபர்!”

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலகின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மை என்று சமூக வலைதளங்களில் அஜித் தரப்பிலும் கசிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேறு ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோக்களில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சிலர் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறினர். ஆனால் அஜித்தின் தரப்பிலிருந்து இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லை என்றும் இயக்குனர் மாற்றப்பட்டதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் தவறானது என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குபவர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  17 நாட்களில் பைசன் அதிரடி, மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணி வெற்றி

More in Cinema News

To Top