Connect with us

“தேரே இஷ்க் மே முதல் நாள் வசூல் 🔥 தனுஷ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அப்டேட்!”

Cinema News

“தேரே இஷ்க் மே முதல் நாள் வசூல் 🔥 தனுஷ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அப்டேட்!”

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் உருவான ‘தேரே இஷ்க் மே’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது, இந்தி பதிப்பின் அதிகாரப்பூர்வ முதல் நாள் வசூல்: ₹15.06 கோடி என நடிகர் தனுஷ் தன் சமூக வலைதளங்களில் அறிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பாலிவுட்டில் பல படங்கள் தோல்வியடைந்த சூழலில், தேரே இஷ்க் மே நல்ல ஓபனிங் பதிவு செய்துள்ளது. விமானப்படை அதிகாரியாக தனுஷ் நடித்த விதம் பாராட்டப் பெற்றுள்ள நிலையில், கிருத்தி சனோனுடன் அவரது chemistry-யும் சிறப்பாக இருந்தது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், ராஞ்சனா படத்தின் கிரேஸ் காரணமாக ரசிகர்கள் முதல் நாளே திரையரங்குகளுக்கு திரண்டனர்.

தமிழ் & தெலுங்கு பதிப்புகளுக்கு தனுஷ் ஏதுமொரு பெரிய புரொமோஷன் செய்யாததே, தெற்கு மாநிலங்களில் வசூல் குறைந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது. ராஞ்சனா தமிழ் டப் (அம்பிகாபதி) போல வெளியிடாமல், இந்தி டைட்டிலையே வைத்ததே கூட ஒரு காரணம்.

2013ல் வெளியான ராஞ்சனா உலகளவில் தனுஷுக்கு ₹100 கோடி வெற்றியைத் தந்த படம். 12 ஆண்டுகள் கழித்து அதே மாஜிக் மீண்டும் நடக்குமா என்பது சனி-ஞாயிறு வசூலில் தான் இருக்கும், ஏனெனில் தற்போது பாலிவுட்டில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொங்கல் ரேஸை தவிர்க்கும் ஜனநாயகன் – ஜனவரி 21க்கு பின் ரிலீஸ்

More in Cinema News

To Top