Connect with us

திமுகவுக்கு ஆதரவாக போலீஸ்–அரசாங்கம் செயல்படுகிறது; திட்டமிட்டு தாக்கியதாக தவெக கண்டனம் – “நாங்கள் ஓடவுமில்லை, ஒளியவுமில்லை!”

Politics

திமுகவுக்கு ஆதரவாக போலீஸ்–அரசாங்கம் செயல்படுகிறது; திட்டமிட்டு தாக்கியதாக தவெக கண்டனம் – “நாங்கள் ஓடவுமில்லை, ஒளியவுமில்லை!”

சென்னை: “மாநில அரசின் விசாரணை இருந்தால், திமுக அரசு தமிழக வெற்றிக்கழகம் மட்டுமே தவறு செய்தது எனக் காட்டி விடும்; அதனால் எங்களுடைய வளர்ச்சி பாதிக்கும்,” என தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கரூர் நிகழ்வைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அந்த நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர்; இதற்கு ஒரு நியாயமான விசாரணை தேவை. இதில் ஒரு திட்டமிட்ட சதி நடந்திருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். ஆனால் குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் பேசாமல், சட்ட ரீதியாக நீதித்துறையை அணுக முடிவு செய்தோம்,” என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஒரு வார காலமாக ஊடகங்களில் நாங்கள்தான் குற்றவாளிகள் என பரப்பினர். காவல்துறை, அரசு, செய்தி நிறுவனங்கள் அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தன. அந்த நிலையில் எங்களால் பேச முடியவில்லை; நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. அதன் மூலம் திமுக அரசு தமிழக வெற்றிக்கழகமே இந்தச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பு என ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியது,” என்றார்.

“சமூக வலைதளங்களில் செயற்பட்ட எங்களது இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று எங்களது கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது — ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நபர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்பதுதான். உச்சநீதிமன்றம் இதனை அங்கீகரித்து, நேரடியாக விசாரணையை கண்காணிக்க தீர்மானித்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கூறினார்: “மாநில அரசு விசாரணை நடத்தியிருந்தால், திமுக அரசு எங்கள்மீது குற்றச்சாட்டை மட்டும் சுமத்தியிருக்கும். அது எங்களுடைய வளர்ச்சியை முடக்குவதற்கான அரசியல் முயற்சியாக இருந்திருக்கும். தற்போது சர்வேயில் தவெகக்கு 27 சதவீதம் மக்கள் ஆதரவு உள்ளது; இதனை குறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாங்கள் உறுதியுடன் நிற்கிறோம். விஜயின் ஒரே செய்தி — 41 குடும்பங்களுடன் நின்று உண்மையை வெளிக்கொணர்வதே எங்களுடைய நோக்கம்,” என்று வலியுறுத்தினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திமுகவில் சலசலப்பு! ஆர்.எஸ். பாரதி அமைதியாய் இருக்க, வாஷ் அவுட் கிளம்புதா? விசிக–தவெக கவனிக்கட்டும்!

More in Politics

To Top