Connect with us

சென்னை — இந்திய வளர்ச்சியை முந்திய தமிழ்நாடு! ‘பவர் ஹவுஸ்’ என பெருமைபடும் முதல்வர் ஸ்டாலின்

Politics

சென்னை — இந்திய வளர்ச்சியை முந்திய தமிழ்நாடு! ‘பவர் ஹவுஸ்’ என பெருமைபடும் முதல்வர் ஸ்டாலின்

கோவை: தமிழ்நாடு தற்போது இந்தியாவின் புத்தொழில் வளர்ச்சியில் முன்னணியில் திகழ்கிறது எனவும், மாநிலத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வருடாந்திர 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாகவும், இதே நேரத்தில் தேசிய சராசரி வளர்ச்சி வெறும் 11 சதவீதம் மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு “இந்தியாவின் பவர் ஹவுஸ்” என பெருமிதமுடன் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற “உலக புத்தொழில் மாநாடு – 2025” நிகழ்வில் பங்கேற்று தொடக்க உரையாற்றிய முதல்வர், தமிழ்நாடு அமைதியான, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலமாக இருப்பதால் உலகின் பல தொழில்துறையினரும் நம்பிக்கையுடன் இங்கு முதலீடு செய்ய முன்வருகிறார்கள் என்றார். நிம்மதியான சூழலில் தொழிலை நடத்தலாம் என்ற நம்பிக்கைதான், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கிறது எனவும் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
“எங்கள் திராவிட மாடல் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற தொழில் திட்டங்களை ஈர்த்துள்ளது. அதிக முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கக்கூடிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தமிழ்நாட்டில் வேகமாக விரிவடைந்துள்ளன. 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவதற்காக அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது. இதில் பெரிய தொழில்கள் மட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களும் முக்கிய பங்காற்றுகின்றன. அதேபோல் புதுசு புதுசாக உருவாகும் புத்தாக்க தொழில்களும் இந்த வளர்ச்சியின் முக்கிய அங்கமாக மாறியுள்ளன.”

அவர் தொடர்ந்து கூறினார்:
“புதிய சிந்தனைகள், புதுமை முயற்சிகள் தொழில்துறைக்குள் வரவேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்கான ஊக்குவிப்புகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என அனைத்து சமூகத்தினரும் புத்தொழில் முயற்சிகளில் பங்குகொள்வதே திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக பல முன்னேற்றமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை உருவாக்கும் கனவோடு நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.”

அவர் மேலும் வலியுறுத்தினார்:
“ஸ்டார்ட்-அப் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது பெரும்பாலும் பெரிய நிறுவனங்களும் பில்லியன் டாலர் மதிப்பீடுகளும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் புத்தொழில் என்பது சிலருக்காக மட்டும் அல்ல — எல்லோருக்கும் திறந்த வாய்ப்பாக மாறவேண்டும் என்பதே எங்களின் நோக்கம். விளிம்புநிலை மக்களும் தொழில்முனைவு முயற்சிகளில் இணைவது திராவிட மாடல் கொள்கையின் அடிப்படை அம்சம். சமூகநீதி தொழில்துறையிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.”

முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்:
“கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, முன்னைய காலத்தை விட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2,032 நிறுவனங்களாக இருந்தது இப்போது 12,000-ஐ தாண்டியுள்ளது. இதில் மிகுந்த மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் — அந்த 12 ஆயிரத்திலும் சரியாக பாதி நிறுவனங்கள் பெண்கள் தலைமையில் நடத்தப்படுகின்றன! இது தமிழ்நாட்டு பெண்களின் புத்துணர்வையும், திராவிட அரசின் ஊக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.”

See also  கோயம்புத்தூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்! — ஷூட்டிங் தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top