Connect with us

தமிழர்கள் நன்றியுள்ளவர்கள் – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Cinema News

தமிழர்கள் நன்றியுள்ளவர்கள் – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

பொது விழா ஒன்றில் தமிழர்கள் உழைப்பாளிகள் , புத்திசாலிகள் , நன்றி உள்ளவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது தற்போது செம வைரலாக வலம் வருகிறது .

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில், காணொலி வாயிலாக கலந்துகொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது :

அம்பானி, டாடா ஆகியோருடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்துள்ளன. அப்படியே இந்த பக்கம் பிரதமர் வாஜ்பாய் முதல் மோடி வரை அவர்கள் அருகே அமர்ந்து டிபன் சாப்பிட்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

இவர்கள் அனைவரின் தனிப்பட்ட மேனேஜனர்கள், ஆலோசகர்களில் 70-75 சதவீதம் பேர் தமிழ் மக்களாக தான் இருக்கிறார்கள்.

தமிழர்கள் உழைப்பாளிகள் , புத்திசாலிகள் , நன்றி உள்ளவர்கள் இது இருப்பதால் தான் எங்கு சென்றாலும் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

2047-ல் இந்தியா வல்லரசு நாடாகும். உங்கள் கடமைகளை முடித்துவிட்டு இந்தியா வந்துவிடுங்கள். 50 ஆண்டுகளாக நான் சினிமாவில் நடித்து வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top