Connect with us

எந்த தகப்பனுக்கும் நடக்கக் கூடாத துயரம் – பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சூரி..!!

Cinema News

எந்த தகப்பனுக்கும் நடக்கக் கூடாத துயரம் – பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சூரி..!!

உடல்நலக்குறையால் உயிரிழந்த இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் மறைவுக்கு பெருந்துயருடன் வேதனை தெரிவித்துள்ளார் நடிகர் சூரி .

இசை ஜாம்பவான் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் அதிகம் பாடியுள்ள பவதாரிணி . இளையராஜா இசையில் பாடிய மயில்போல பொண்ணு பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் .

இந்நிலையில் பு பவதாரிணி இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார் .

இதையடுத்து இன்று மாலை பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது .

பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பவதாரிணியின் மறைவுக்கு நடிகர் சூரி பெருந்துயருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ள பல மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது இளையராஜாவின் இசை ஆறுதலாக இருந்துள்ளது; இன்று அவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அவருக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை; எந்த தகப்பனுக்கும் நடக்கக் கூடாத துயரம் இது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top