Connect with us

“சுறா” வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

Cinema News

“சுறா” வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

TVK Vijay: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கிய ‘சுறா’ திரைப்படம் இன்று அரசியல் சூழலில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜய், தமன்னா, வடிவேலு நடித்த அந்த படத்தின் கிளைமேக்ஸ் வசனமே தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரால் ஹீரோவாக அறிமுகமான விஜய், பின்னர் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட கூடுதல் சம்பளம் வாங்கும் நிலைமையை அடைந்த அவர், தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை அரசியலில் தொடங்கியுள்ளார்.

“தமிழக வெற்றிக் கழகம்” என பெயரிடப்பட்ட கட்சியை ஆரம்பித்து, மக்களை நேரில் சந்திக்கும் முயற்சியில், சூறாவளி சுற்றுப்பயணம் எனும் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவரும் விஜய், பல மாவட்டங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

ஆனால் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் நடந்த மக்கள்சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தது அனைவரையும் உலுக்கியது. உடனே விஜய் அறிவித்த நிவாரணத் தொகை – உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ₹20 லட்சம் – அவரால் நேரடியாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் கரூருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து வந்து சந்தித்தார். இதுவே தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, திமுக ஆதரவாளர்கள் சுறா படத்தில் விஜய் கூறிய பிரபல வசனத்தை மீண்டும் வெளியிட்டு ட்ரோல் செய்யத் தொடங்கினர்:

“ஒரு 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக நாம பொறந்து வளர்ந்த மண்ணை விட்டுப் போக மனசு வந்தது எப்படி? எவன் காசு நீட்டினாலும் கை நீட்டிடுவீங்களா? உலகத்துல சுயமரியாதை பத்தி அதிகம் பேசுறதும் தமிழன் தான், அதை அடிக்கடி அசிங்கப்படுத்துறதும் தமிழன் தான்!”

அந்த வசனத்தையே பயன்படுத்தி விஜய்யின் சமீபத்திய நடவடிக்கையை “பணம் கொடுத்து ஆறுதல் கூறும் அரசியல்” என சித்தரித்து திமுகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு தளபதி ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். “விஜய் மனிதாபிமானத்துடன் உதவி செய்துள்ளார், அதை ட்ரோல் செய்வது மனிதநேயமில்லாத செயல்” என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் மழையென பொழிகின்றன.

பல நெட்டிசன்கள், “எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், உண்மையான தலைவன் மக்களை நேரில் சந்திப்பார்; விஜய் விரைவில் கரூருக்குச் செல்வார் என நம்புகிறோம்” என்று தெரிவித்து வருகின்றனர்.

See also  ராட்சசன் கூட்டணி, மீண்டும் மின்னுவதற்கு தயாராகிய விஷ்ணு விஷால்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவு அதிகம் விஜய்யின் பக்கம் இருக்கும் என்றும், “எத்தனை ஆட்டங்கள் நடந்தாலும் முடிவை தளபதி கட்டுவார்!” என ரசிகர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top