Connect with us

தேர்தல் பத்திரங்கள் செல்லாது.. உச்சநீதிமன்றம் அதிரடி.. மத்திய அரசுக்கு பின்னடைவு

Supreme_Court

Politics

தேர்தல் பத்திரங்கள் செல்லாது.. உச்சநீதிமன்றம் அதிரடி.. மத்திய அரசுக்கு பின்னடைவு

அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பாத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்துக்கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது.

தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி, இந்த திட்டம் அரசியலமைப்பின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும் என்றார். தனியுரிமைக்கான அடிப்படை உரிமையானது குடிமக்களின் அரசியல் தனியுரிமை மற்றும் இணைப்புக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்று அமர்வு கூறியது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்றும், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தகவல் அறியும் உரிமை மீறல் நியாயமானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக - TTV தினகரன் வலியுறுத்தல்..!!

More in Politics

To Top