Connect with us

கூலி படத்திற்காக வின்டேஜ் ரஜினியாக மாறிய சூப்பர்ஸ்டார் – தரமான சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்..!!

Cinema News

கூலி படத்திற்காக வின்டேஜ் ரஜினியாக மாறிய சூப்பர்ஸ்டார் – தரமான சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்..!!

சூப்பர்ஸ்டார் தனது 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் கையில் கொடுத்துள்ள நிலையில் இப்படத்தின் சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் . இவரது இயக்கத்தில் தற்போது வெறித்தனமாக உருவாகி வரும் படமே கூலி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 படமான இப்படம் தலைவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் மிகவும் நெருக்கமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான் .

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் சண்டை காட்சிகள் மிக பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் இந்நிலையில் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் கம்போ எந்த கதையை நமக்காக உருவாக்கி உள்ளது என்பதை காண செம அவளாக உள்ளோம்.

இப்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கூலி படத்தின் லுக்கில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இது வின்டேஜ் ரஜினியின் கெட்டப் என கூறி வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் படத்தின் கதை மற்றும் கத்பாத்திரங்கள் அதில் எந்த நட்சத்திரங்கள் நடிக்க போகிறார்கள் என்ற தகவலுக்காக செம ஆவலாக ரசிகர்கள் உள்ளனர் .

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களுக்கு தனி மவுசு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் - கடுமையான தண்டணை வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top