Connect with us

எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

tvk

Politics

எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

TVK Vijay: என் அன்பும் நம்பிக்கையும் நிறைந்த தோழமைகளே, வணக்கம். நம் அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கிறோம். பல மாதங்களாக அமைதியான ஆழ்மனச் சிந்தனையிலும், உழைப்பிலும் கழித்த பிறகு, இன்று மீண்டும் உங்களோடு உரையாடி, ஒரு முக்கியமான அழைப்பை உங்களுக்கு அளிக்கிறேன்.

நம்மைத் துச்சமாக எண்ணி, நம்மைத் தாழ்த்த முயன்ற சூழ்ச்சியாளர்கள், வஞ்சகர்களின் நிழல்கள் நம்மை சுற்றி நிற்கின்றன. ஆனால், அச்சமின்றி – நம்பிக்கையுடன் – நம் அன்னைத் தமிழ்நாட்டின் மக்களுக்காக எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வீரமான படைகளாக நீங்கள் இருக்கிறீர்கள்; நம்மைக் காப்பாற்றும் கவசமாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். இந்த உறவை யாராலும் பிளக்க முடியாது, தடுக்க முடியாது. கடந்த ஒரு மாத காலமாக, தமிழ்நாட்டின் வீதிகளில், கிராமங்களில், நகரங்களில் – மக்கள் தாமாகவே நமக்காக பேசுகிறார்கள். அவர்களின் மவுன சாட்சியே நம் வெற்றியின் முதல் ஓசை.

இன்றைய கள நிலவரம் நம்மை ஊக்குவிக்கிறது. ஆனால் அந்த ஊக்கத்தை நிதானத்துடனும், தீர்மானத்துடனும், அளந்தும் செயல்படுத்த வேண்டியது அவசியம். எதிரிகள் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் அடுத்த அடியை நாம் தெளிவாக எடுக்க வேண்டும் – அது தமிழகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அடியாக அமைய வேண்டும்.

அதற்காகவே, நம் கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், நமது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள், பொதுப்பணிகள், மற்றும் மக்களோடு நேரடி தொடர்பு வளர்த்தல் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

நாள்: புதன்கிழமை, 5 நவம்பர் 2025
இடம்: மாமல்லபுரம் – போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டல்
நேரம்: காலை 10.00 மணி

அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் அன்புடன் அழைக்கிறேன்.

வருங்காலம் நமதே. நம்பிக்கையுடன் திட்டமிடுவோம், ஒற்றுமையுடன் செயல்படுவோம்
நல்லதே நடக்கும் – வெற்றி நிச்சயம்.

விஜய்
தலைவர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக)

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஸ்டாலின் – எடப்பாடி இடையேயான பெரிய வித்தியாசம்! 🔥 திமுகவில் பச்சை துரோகம் வெளிச்சம் – பிரபலத்தின் அதிரடி கருத்து!

More in Politics

To Top