Connect with us

பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் சூரி – வியக்க வைக்கும் லைன் அப்ஸ்..!!

Cinema News

பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் சூரி – வியக்க வைக்கும் லைன் அப்ஸ்..!!

தமிழ் சினிமாவின் கலக்கல் நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரியின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால்பதித்து இன்று மாஸ் ஹீரோக்களுக்கு போட்டியாக நிற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி . தனது கள்ளம்கபடமான் நடிப்பால் எண்ணற்ற குடும்ப ரசிகர்களை சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கருடன்.

திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இப்படி கதையின் நாயகனாக கலக்கி வரும் நடிகர் சூரி தொடர்ந்து நல்ல கதையம்சங்களைக் கொண்ட திரைக்கதையில் நடிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தான் பிரபல இயக்குநர் ஒருவருடன் சூரி கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புரூஸ்லீ, விலங்கு உள்ளிட்ட சூப்பர் ஹிட் கதைகளை மக்களுக்கு விருந்தளித்த பிரசாந்த் பாண்டிய ராஜன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரியின் பக்கம் தற்போது காற்று பலமாக அடிப்பதால் அவரை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் சூரி அடுத்ததாக யாருடன் கைகோர்க்க போகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top