Connect with us

பாலிவுட்டுக்கு தாவும் சிவகார்த்திகேயன், இயக்குநரை சந்தித்த SK

Cinema News

பாலிவுட்டுக்கு தாவும் சிவகார்த்திகேயன், இயக்குநரை சந்தித்த SK

Sivakarthikeyan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து தனது சினிமா பயணத்தில் புதிய உச்சங்களை நோக்கி செல்கிறார்.அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படம் ‘மதராஸி’.

முதன்முறையாக பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து பணியாற்றினார். இந்த பெரிய படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திறமையான நடிகர்கள் இணைந்திருந்தனர். மதராஸி’ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

திரையரங்குகளில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சிவகார்த்திகேயனின் புதிய மாஸ் லுக்கை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். இனிய பிறந்தநாள் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் சமூக – அரசியல் அடிப்படையில் அமைந்த சீரியஸான கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதன் பின், ‘டான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அறிமுகமான இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் அடுத்த இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த கூட்டணி மீண்டும் ஒரு feel-good entertainer ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் பக்கம் திரும்பிய சிவகார்த்திகேயன்

இந்நிலையில், ரசிகர்களையும், ஊடகங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் மும்பையில் உள்ள பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகின்றன.

இருவரும் எதுவும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் “சிவகார்த்திகேயன் பாலிவுட் அறிமுகத்திற்கு தயாராகிறார்!” என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இணையத்தில் பரவி வரும் தகவல்களின் படி, சஞ்சய் லீலா பன்சாலி தற்போது தயாரித்து வரும் ஒரு பீரியட் டிராமா அல்லது இசை அடிப்படையிலான கதையில் சிவகார்த்திகேயனுக்கு முக்கிய வேடம் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து விரைவில் ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அது நடந்தால், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிலிருந்து பான்-இந்தியா மற்றும் பாலிவுட் எனும் புதிய தளத்தில் கால் பதிக்கும் முக்கிய கட்டமாக அமையும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரும்புகிற இடமெல்லாம் சிவகார்த்திகேயனின் வெற்றி, மீண்டும் இணையும் டான் பட கூட்டணி

More in Cinema News

To Top