Connect with us

சூப்பர்ஸ்டாரோடு நடிக்கத் தயார்..! நடிகர் சிவகார்த்திகேயன் Open Talk! Viral!

Cinema News

சூப்பர்ஸ்டாரோடு நடிக்கத் தயார்..! நடிகர் சிவகார்த்திகேயன் Open Talk! Viral!

அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தாடி, மீசை இல்லாமல் கிளீன் ஷேவ் லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன் காணப்பட்டார். நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த அவர், முதலில் அங்கு வைக்கப்பட்டுள்ள ஏலியன் உருவ பொம்மையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தொடாந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் குறித்து தன்னுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.

தன்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து சிவகார்த்திகேயன் தன்னை உற்சாகப்படுத்தியதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் AR ரஹ்மான் உள்ளிட்டவர்களும் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்தப் படத்திற்காக 5 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருந்ததாக AR ரஹ்மான் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டலில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே படத்தை அதிகமாக பிரமோட் செய்யும் வகையில் பல யூடியூப் சேனல்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பேசிய சிவகார்த்திகேயன் அயலான் படம் குறித்து மட்டுமில்லாமல் தான் தற்போது நடித்துவரும் SK 21 படம், அடுத்ததாக AR முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ள படம் குறித்தெல்லாம் பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்தில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்திகளை தானும் பார்த்ததாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் தான் இணைவது குறித்து தனக்கு இதுவரை யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவே இதை தான் அறிந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் தான் என்றும் அவரின் படத்தில் சிங்கிள் ஷாட்டாக இருந்தாலும் நடிக்க தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ரஜினியை பார்த்தே சினிமாவில் அதிகமான விஷயங்களை தான் கற்றதாகவும் ஒரு ரசிகனாக ரஜினியுடன் நடிக்க தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top