Connect with us

“OTTயில் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றுவரும் சித்தார்த்தின் சித்தா திரைப்படம்!”

Cinema News

“OTTயில் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றுவரும் சித்தார்த்தின் சித்தா திரைப்படம்!”

பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த்துக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளும்படி எந்தப் படமும் அமையாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சித்தா படத்தில் நடித்தார் அவர். நடித்தது மட்டுமில்லாமல் அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படமானது கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸானது.

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எதிர்பார்ப்பில்லாமல் படம் வெளியானாலும் படத்தின் கதை, மேக்கிங் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தார்கள் ரசிகர்கள். எனவே இந்தப் படம் சித்தார்த்தின் கரியரில் மெகா ஹிட்டாக அமைந்திருக்கிறது.

சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி கமல் ஹாசன், ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட செலிபிரிட்டிகளும் படத்துக்கு தங்களது பாராட்டை தெரிவித்தனர். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் வணிக ரீதியாகவும் நல்ல லாபத்தை பார்த்திருக்கிறது. இந்நிலையில் படமானது இன்று ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஹாட் ஸ்டார் OTT தளத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது.

திரையரங்குக்கு சென்று படத்தை பார்க்காதவர்களும், ஏற்கனவே பார்த்தவர்களும் படத்தை பார்த்து OTTயிலும் நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்துவருகிறார்கள். அது சம்பந்தமான கமெண்ட்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. தியேட்டர் மற்றும் OTT ஆகிய இரண்டு இடங்களிலும் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் சித்தா படக்குழு ஹேப்பி அண்ணாச்சி மூடில் இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💫 சிம்பு பாராட்டிய காதல் படம் “ஆரோமாலே” 💞 | New Gen Romantic Film from Tamil Cinema 🎬

More in Cinema News

To Top