Connect with us

“சீனியர்களே, அப்பா குறித்த பேச்சை நிறுத்துங்கள்! — கௌதம் கார்த்திக் மனம் திறப்பு”

Cinema News

“சீனியர்களே, அப்பா குறித்த பேச்சை நிறுத்துங்கள்! — கௌதம் கார்த்திக் மனம் திறப்பு”

90களில் மிரட்டலான ஹீரோவாக ரசிகர்களை வசீகரித்த நடிகர் கார்த்திக் குறித்து, இயக்குநர் பாரதி கண்ணன் சமீபத்திய பேட்டியில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்தது பெரிய விவாதமாகியது. கார்த்திக் போல மிமிக்ரி செய்து, ஒரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு பணத்தைத் திருப்பவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். பின்னர், லேசாக மிரட்டப்பட்டதாகவும், தான்சொன்னதைப் பற்றி வருத்தமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகு மற்ற சிலரும் கார்த்திக் குறித்து பேச ஆரம்பித்த நிலையில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தைக் குறித்து திறந்த மனதில் பேசியுள்ளார்.

“என் அப்பா பற்றி தொடர்ந்து வரும் விமர்சனங்கள் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நாங்கள் பார்த்து வளர்ந்த சீனியர்கள் இப்படி பொதுவில் பேசுவது மனதை காயப்படுத்துகிறது. அந்த காலத்தில் அவர்கள் அண்ணன்-தம்பி மாதிரி நெருக்கமாக இருந்தவர்கள். ஏதேனும் பிரச்சனை இருந்தால் நேருக்கு நேர் பேசியிருக்கலாம். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, பொதுத்தளத்தில் இப்படிச் சொல்ல தேவையில்லை,” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “வாரிசு நடிகர்? என்னை பாதிக்காது!” — அதர்வா தெளிவான பதில்

More in Cinema News

To Top