Connect with us

“சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள Conjuring கண்ணப்பன் படத்தின் First Single பாடல் வெளியாகி Viral!”

Cinema News

“சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள Conjuring கண்ணப்பன் படத்தின் First Single பாடல் வெளியாகி Viral!”

சதீஷ் நடித்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’என்ற படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ‘தளபதி 68’ அப்டேட்டும் உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜாவிடம் காதல் தோல்வி அடைந்த ஒருவர் பாட்டு கேட்க வருகிறார். இதனை அடுத்து அம்மா மீது பாசம் இல்லை என ஒருவர் வைத்தியம் பார்க்க வருகிறார். அவர்களுக்கு சில பாடல்களை பரிந்துரை செய்த மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக சதீஷ் வரும் போது அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

தனக்கு தூக்கம் வராமல் இருக்க ஒரு பாடல் வேண்டும் என்றும் தூக்கம் வந்தால் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கும் ஒரு பாட்டு கொடுக்கிறார்.

இதனை அடுத்து அவர் எழுந்து செல்லும் போது ‘அர்ச்சனா கல்பாத்தி மேடம் தான் கால் செய்தார்கள், ‘தளபதி 68’ படத்தின் பாடலையும் கேட்டு வரச் சொன்னார்கள் என்று கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா ’வெளியில வெங்கட் பிரபு வெயிட் பண்ணுகிறார், அவரிடம் நான் சொல்லி தருகிறேன்’ என்று கூற சதீஷ் வெளியே போகும் காட்சியுடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. இந்த நிலையில் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி வைரல்..!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top